அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் மஸ்க் - எலானுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.நா! | Elon Musk

x

ஆப்பிள் நிறுவனத்துடனான சர்ச்சை, பேசித் தீர்க்கப்பட்டதாக ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் ட்விட்டர் விளம்பரங்களில் செலவு செய்வதை நிறுத்தி விட்டதாகவும், அதன் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்குவதாகவும் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அமெரிக்காவின் கருத்து சுதந்திரத்தை ஆப்பிள் வெறுக்கிறதா என அவர் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியை சந்தித்து மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து பிரச்சினை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டதாக மஸ்க் தெரிவித்தார்.

ஐநா உயரதிகாரி தியரி பிரெட்டன், ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க்-உடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

ட்விட்டரில் பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து ஆலோசித்த தியரி பிரெட்டன், ஐநாவின் தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ட்விட்டர் கட்டாயம் கீழ் படிய வேண்டும் என்று மஸ்க்கிடம் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்