தொடர்ச்சியாக காணாமல் போகும் இருசக்கர வாகனங்கள் - குடியிருப்பு பகுதியில் நோட்டமிட்டு திருடும் இளைஞர்

x

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனங்களை தொடர்ச்சியாக திருடி வரும் மர்ம நபர் ஒருவர், திருட முடியாத வாகனங்களை சேதப்படுத்தி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் செந்தூர்புரம் குடியிருப்பு பகுதியில், வீட்டு வாசலில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக குடியிருப்புவாசிகள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் நோட்டமிட்டு, இருசக்கர வாகனங்களை திருடி செல்வது தெரியவந்துள்ளது.

இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ள அப்பகுதி மக்கள், அந்த நபரை விரைந்து பிடிக்கும்படி, காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்