தொடரும் மழை..வந்த அலெர்ட்.. கடலோரம் வசிக்கும் மக்கள் உஷார்

x

கேரளாவில் மழை தொடர்ந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வலிமையை பொறுத்து மழையின் தன்மை மாறுபடலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா கடற்கரை முதல் கேரள கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளதோடு, இன்று ஆலப்புழா, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும், 2ம் தேதி திருச்சூர், மணப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும் 3ம் தேதி பத்தணந்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடல் அலை சீற்றமாக காணப்படுவதால் கடலரிப்பு வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் எனவும், மேற்கூரை பலமில்லாத வீடுகளில் வசிப்போர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்