தொடரும் பெட்ரோல் + மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு" - டிஜிபி வெளியிட்ட விளக்கம்
தமிழகத்தில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, டிஜிபி அலுவலகம் வெளிட்டுள்ள அறிகையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீடுகள், வாகனங்கள் மீது வீசிய சம்பவங்கள் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கோவை மாவட்டத்தில் 5 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 4 பேரும், சேலம், மதுரையில் தலா இரண்டு பேரும், திண்டுக்கல்லில் ஒருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story