"ஆப்கானுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும்" - ஐநா திட்டவட்டம்

x

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஆப்கான் பெண்களுக்கு தலிபான் அரசு தடை விதித்த போதிலும், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தப்போவதில்லை என ஐநா தெரிவித்துள்ளது. ஆப்கான் பெண்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிய தலிபான் அரசு தடை விதித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஜி 7 கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில், பெண்களுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் தடை விதிக்கப்பட்ட போதிலும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தப்போவதில்லை என ஐநா தெரிவித்துள்ளது. பெண்களின் பங்களிப்பு இல்லாமல் விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை எனவும், இருப்பினும் பட்டினியால் வாடுபவர்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு உதவி புரிய நிபந்தனை விதிக்க முடியாது எனவும் ஐநா தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐநா அதிகாரிகள் வரும் வாரங்களில் ஆப்கானிஸ்தானுக்கு நேரில் சென்று அந்நாட்டின் தலிபான் ஆட்சியாளர்களுடன் நிலைமை குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்