அமைச்சர் செந்தில்பாலாஜியை முதல்வர் சந்தித்தது குறித்து அவதூறு பரப்பிய காவலர் சஸ்பெண்ட்

x

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறு படங்களை வெளியிட்ட, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முதல்நிலை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்ற வந்த பெருமாள், தனது முகநூலில், அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சென்று பார்த்த முதலமைச்சரின் படத்தையும், காமெடி நடிகர் போண்டாமணியின் புகைப்படத்தையும் இணைத்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதோடு, நடிகர் பிரபு நாதஸ்வரம் வாசிப்பது போன்ற காட்சியையும் இணைத்துள்ளார். இது குறித்து திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெருமாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்