"சதிகாரர்கள்..லீக்கான ஆடியோ".. சீனா, பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்தியா.. ஆடிப்போன ஐநா மாநாடு..!
மும்பையில் கொடிய தாக்குதலை அரங்கேற்றிய சதிகாரர்கள் இன்னும் பாதுகாக்கப்படுகிறார்கள் என ஐ.நா.வில் இந்தியா ஆதங்கத்தை பகிர்ந்துள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதற்கு எதிராக உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாடு மும்பையில் நடைபெற்றது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அவையில் ஜெய்சங்கர் பேசுகையில், சில நேரங்களில் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் ஐ.நா.வால் வெற்றியை பெற முடியவில்லை என குறிப்பிட்டவர், இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கிறது என்றார்.
Next Story