ஆம்பூரில் ரயிலை கவிழ்க்க சதியா? மோப்ப நாயால் சிக்கிய நபர் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ரயில் தண்டவாளத்தில் காங்கிரீட் கல்லை வைத்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...
ஆம்பூர் ரயில் நிலையத்திற்கும், பச்சக்குப்பம் ரயில் நிலையத்திற்கும் இடையே காவிரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் காங்கிரீட் கல் இருந்ததாக, ரயிலை இயக்கிய நபர் ஜோலார்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அப்பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த நபர், தண்டவாளத்தில் கல்லை வைத்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவரைப் பிடித்து விசாரித்ததில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரசாத் என்பது தெரிய வந்தது. அவரை, மனநல காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Next Story