கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா - உடலில் சேற்றை பூசி வினோத நேர்த்திக்கடன்

x

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா - உடலில் சேற்றை பூசி வினோத நேர்த்திக்கடன்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, முத்துமாரியம்மன் கோயில் விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, உடலில் சேற்றை பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொன்னமராவதி அருகே அமைந்துள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பொன்னமராவதி, ஆலவயல், செவலூர், செம்பூதி ஆகிய இடங்களில் திரளான பக்தர்கள் வருகை தந்தனர். ராட்சச ஈட்டி, கம்பு உள்ளிட்ட பொருட்களுடன் பக்தர்கள், தங்கள் உடலில் சேறு சகதி பூசிக்கொண்டு, கோலாட்டம் ஆடினர். பின்னர், முத்துமாரியம்மனை தரிசனம் செய்து, குளத்தில் புனித நீராடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவை காண தஞ்சை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்