"காங்கிரஸ் பயங்கரவாதிகளை திருப்திப்படுத்தியது" - பிரதமர் மோடி காட்டம்
சித்ரதுர்காவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, 2008-ல் டெல்லி பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் கண்ணீர் சிந்தினார் எனவும் இந்திய ராணுவம் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்திய போது, ராணுவத்தின் திறமையை காங்கிரசார் கேள்வி எழுப்பினார்கள் எனவும் விமர்சனம் செய்தார். கர்நாடகாவிலும் பயங்கரவாதத்தை காங்கிரஸ் எப்படி வளர்த்தது என்பதை பார்த்திருப்பீர்கள் என வாக்காளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, பாஜக பயங்கரவாதத்தை முறியடித்தது எனவும் பயங்கரவாதிகளை திருப்திப்படுத்தும் நடைமுறைக்கு முடிவுகட்டியது எனவும் குறிப்பிட்டார். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்திடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என வாக்காளர்களை எச்சரித்த பிரதமர் மோடி, இரு கட்சிகளால் மாநிலத்தில் குடும்ப அரசியல், ஊழல் மட்டுமே அதிகரிக்கும் எனவும் இரட்டை என்ஜின் அரசு அமையும்போது மாநிலம் வளர்ச்சியடையும் எனவும் குறிப்பிட்டார். பிரசாரத்தின் போது உள்ளூர் மேளத்தை இசைத்து பிரதமர் மோடி உற்சாகப்படுத்தினார்.