"காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் காணவில்லை"என பாஜகவினர் போஸ்டர் ஓடியதால் பரபரப்பு

x

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், சித்தாபூர் தொகுதி எம்எல்ஏவுமான பிரியங்க் கார்கேவைக் காணவில்லை என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருப்பது கர்நாடகாவில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இடையே சமூக ஊடகங்கள் தொடங்கி போஸ்டர் வரை யுத்தம் நடைபெற்று வருகிறது. பிரியங்க் கார்கேவை கடந்த ஒன்றரை மாதமாக தொகுதியில் காணவில்லை என பாஜகவினர் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக இல்லாமல் இருந்த போஸ்டர் யுத்தம், மீண்டும் தற்போது தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்