சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளிலும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றம் குறித்தும், நீதிபதி குறித்தும் அவதூறு கருத்து பரப்பியதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க இடைக்கால தடை விதித்தது.
அதன் தொடர்ச்சியாக ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் கடந்த 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து வரும் 25 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளிலும் சவுக்கு சங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.