சினேகன் அளித்த பரபரப்பு புகார் - நடிகை ஜெயலட்சுமி மீது பாய்ந்த வழக்கு

x

பாஜக மகளிர் அணி மாநில துணைத்தலைவரும் நடிகையுமான ஜெயலட்சுமி மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சினேகம் அறக்கட்டளை பெயரில் நடிகை ஜெயலட்சுமி பண மோசடி செய்வதாக திரைப்பட பாடலாசிரியர் சினேகன் போலீஸில் புகார் அளித்தார். அதன் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்குற்றம் சாட்டி இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது, சென்னை திருமங்கலம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரிவு 420 ஏமாற்றுதல், சட்டப்பிரிவு 465ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சினேகன் மீது போலீசார் 2 வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்