"கலெக்டர் மீது கலெக்டரிடமே புகார் " - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு | Cuddalore

x

https://youtu.be/sYABimQKs1wதிட்டக்குடி அருகே தொழுதூரில் மனுநீதி நாள் முகாமில், மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி மாவட்ட ஆட்சியரிடமே ஒருவர் புகார் அளிக்க சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழுதூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர், தனது மனைவிக்கு நூறு நாள் வேலை வழங்காத‌து குறித்து மாவட்ட ஆட்சியரிடம் 2 மனு கொடுத்த‌தாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்தார். இதை அறிந்த சமூக பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன், அய்யப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனுவை பெற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி, மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளிக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்