நர்சிங் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு - இந்திய செவிலியர் கவுன்சில் அதிரடி அறிவிப்பு
புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று, இளங்கலை நர்சிங் படிப்புக்கு நடைபெற இருந்த பொது நுழைவுத் தேர்வை இந்திய செவிலியர் கவுன்சில் ரத்து செய்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், இளங்கலை நர்சிங் படிப்புக்கு புதுச்சேரியில் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என, இந்திய செவிலியர் கவுன்சில் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தாண்டு நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, இந்திய செவிலியர் கவுன்சிலுக்கு புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்தது. இதையேற்று, இளங்கலை நர்சிங் படிப்புக்கு இந்தாண்டு பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story