2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷன்-பணத்தாசையால் பறிபோன ரூ10 லட்சம்..திண்டுக்கல்லில் அதிர்ச்சி

x

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர், தன்னிடம் ஒரு கோடி ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருப்பதாகவும், அதனை மாற்றி தந்தால் கமிஷன் தருவதாகவும் ஷாஜகான் என்பவரிடம் கூறியுள்ளார். இதனையறிந்த ஷாஜகானின் நண்பர்கள் குணசேகரன் மற்றும் ராஜசேகர் ஆகியோர், ஒரு கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தால், 90 லட்சத்திற்கு 500 ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறியுள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட சக்திவேல், ஷாஜகானையும், அவரது நண்பர்களையும் திண்டுக்கல் கொண்டம நாயக்கனூரிலுள்ள தனது தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவரும் அவரது கூட்டாளிகள் 9 பேரும், ஷாஜகானையும், அவரது நண்பர்களையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி 90 லட்சத்தை பறித்துக்கொண்டு, அவர்களது காரிலேயே தப்பி சென்றுள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்