"காலனிய கால நீதிபதிகள் உடை இன்னும் தேவையா..?"வெகுண்டெழுந்த 100 பெண் நீதிபதிகள்..!

x

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இந்தியாவில் நவீன வடிவ நீதித் துறை உருவாக்கப்பட்டது. மெக்காலே உருவாக்கிய இந்திய கிரிமினல் சட்டம், பல்வேறு ஆசிய நாடுகளிலும் கடை பிடிக்கப்பட்டது.நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், கருப்பு நிற கவுன்கள், கோட்டுகள் அணியும் வழக்கமும், ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1694ஆம் ஆண்டில், அன்றைய பிரிட்டீஷ் அரசி இரண்டாம் மேரி மரணமடைந்த போது, துக்கம் அனுஷ்டிக்க, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவரும் கருப்பு நிற ஆடைகளை அணிந்தனர். பின்னர் இந்த வழக்கம் நிரந்தரமானது. ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த வழக்கம் அமல்படுத்தப்பட்டு, பின்னர் இதநாடுகளுக்கும் பரவியது.இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த சுமார் 100 பெண் நீதிபதிகள், நீதிபதிகளுக்கான ஆடை கட்டுப்பாடுகளை மாற்ற வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கோரியுள்ளனர். கோடை காலத்தில், புடவை மீது கருப்பு கோட்டு மற்றும் கவுன்களை அணிவதால் புழுக்கம் அதிகரித் து, வேலை திறன் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

பெண் நீதிபதிகள், புடவைகள் அணிவதற்கு பதிலாக சுடிதார்கள் அணிய அனுமதியளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில், பெண் நீதிபதிகள் சுடிதார் அணிய அனுமதியளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள இவர்கள், கருப்பு கோட்டுகள் அணிவதிலிருந்து விலக்கு கோரவில்லை. ஆனால், குளிர் பிரதேசமான பிரிட்டன் போன்ற நாடுகளில் வழக்கமான உடை, அதன் மீது ஒரு கோட்டு, அதற்கும் மேல் ஒரு கருப்பு கவுன் உகந்ததாக இருக்கலாம் ஆனால் இந்தியா போன்ற சீதோசன நிலை கொண்ட தேசத்தில் ஆடை, கோட்டு அதன் மீது கவுன் அதுவும் கருப்பு நிறம் தேவை தானா என்ற கேள்வி தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

ஏசி வசதி இல்லாத மாவட்ட நீதிமன்றங்கள், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களில், கடும் வெப்பம் நிலவும் கோடை காலத்தில், வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட கருப்பு நிறத்தில் கவுகளை அணிவது அறிவியலுக்கு முரணானது என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றிற்கு பதிலாக, கருப்பு நிற கைப்பட்டை அல்லது பேட்ஜ் மட்டும் அணிவது, உடல் ஆரோக்கியத்திற்கும், செயல் திறன் அதிகரிப்பிற்கும் உதவும் என்றும் தெரிவிகின்றனர்.ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகளை அதிரடியாக மாற்றம் செய்து வரும் பாஜக அரசு நீதித்துறை ஆடை விவகாரத்திலும் அதிரடி காட்டுமா?


Next Story

மேலும் செய்திகள்