பள்ளிப் பேருந்து ஆய்வில் அதிரடி காட்டிய கலெக்டர்..
கள்ளக்குறிச்சியில், பள்ளிப்பேருந்துகள் குறித்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர், ஒரு பேருந்தை தானே இயக்கி சோதனை செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஷ்வரன் குமார் ஆய்வு செய்தார். பேருந்துகளில் அவசரகால கதவுகள், தீயணைப்பான்கள், முதலுதவி அளிக்கும் உபகரணங்கள், வேக கட்டுப்பாட்டு கருவி உட்பட அனைத்தும் இருக்கிறதா? என பார்வையிட்டார். அப்போது, தனியார் பள்ளிப் பேருந்து ஒன்றை, ஆட்சியர் ஷ்ரவன்குமார், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தானே ஓட்டிப் பார்த்து சோதனை செய்தார்.
Next Story