காங்கிரசில் வெடித்த பனிப்போர்..? அவசர கூட்டம்..அதிருப்தியில் எம்எல்ஏக்கள் - கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் அதிருப்தியில் உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, வியாழக்கிழமையன்று, அவசர கதியில் கூடுகிறது காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையாவிற்கும், டி.கே.சிவக்குமாருக்கும் பனிப்போர் நீடித்த நிலையில், சித்தராமையா முதலமைச்சரானார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக்கப்பட்டனர். இந்த நிலையில் சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் அளிக்கும் கோரிக்கைகளை, அமைச்சர்கள் பரிசீலிப்பதில்லை என்று கட்சி மேலிடத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கேவிற்கு கடிதம் அனுப்பினர். அவரின் உத்தரவின் பேரில் வரும் 27-ம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.