கோவையை அதிரவிட்ட OLX பயங்கரம்.. சம்பவத்தை செய்தது 17 வயது சிறுவன் - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்

x

கோவை கணபதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது காரை விற்க OLX இணையத்தில் விளம்பரம் செய்திருந்தார். இதனை பார்த்த 2 பேர் காரை வாங்க விருப்பம் இருப்பதாக கூறி வெங்கடேஷை வரவைத்தனர். அப்போது காரில் ஏறிய வெங்கடேஷை தாக்கிவிட்டு காரை அவர்கள் கடத்திச் சென்றனர். பின்னர் சந்தையில் இருந்த பொதுமக்கள் உள்ளிட்ட 5 பேரையும் அவர்கள் இடித்துவிட்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சூழலில் காரை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்திச் சென்றது தெரியவந்தது. சிறுவனை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்