2011-16ம் ஆண்டு காலக்கட்டத்தில் மின் வாரியத்தில் ரூ.908 கோடி ஊழல் என புகார் - லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

x
  • அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில் மின்சார வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் 908 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • கடந்த 2011 முதல் 2016 வரை ஆயிரத்து 28 கோடி ரூபாய் அளவில் நிலக்கரி ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு சமர்ப்பித்து இருந்தது.
  • இதன் மீது விரிவான விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை 2011 முதல் 2016 வரை 908 கோடி ரூபாய் ஊழல் நடந்தது ஊர்ஜிதம் ஆகியுள்ளது என்று கூறியுள்ளது.
  • இதற்கு காரணமான முன்னாள் தலைமை பொறியாளர்கள் கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் என, பத்து பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்