"அன்புள்ள டானியா- பள்ளி செல்லத் தொடங்கிய சிறுமிக்கு முதல்வர் வாழ்த்து

x
  • முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு, குணமடைந்த ஆவடி சிறுமி டானியா மீண்டும் பள்ளி செல்லத் தொடங்கியதை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • அந்த சிறுமிக்கு முதல்வரின் உத்தரவுப்படி, அரசு சார்பில் கடந்த ஆண்டு முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
  • தற்போது, குணமடைந்து அவர் பள்ளி செல்லத் தொடங்கியுள்ளார்.
  • இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள டானியாவுக்கு, பள்ளி செல்லத் தொடங்கி விட்டாய் என்று அறிந்தேன்...
  • ஆசிரியர்களுடன் நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்