விபத்தில் பலியான 10-ஆம் வகுப்பு மாணவர் - "12 பேருக்குள் வாழ ஏற்பாடு"-பெற்றோரை மேலும் வேதனையில் தள்ளிய ரிசல்ட்
கேரளாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியான நிலையில் ஏ பிளஸ் கிரேடு பெற்ற மாணவன் அதை கொண்டாடுவதற்கு இல்லை எனும் வகையில் வியாழக்கிழமை மரணம் அடைந்தார்.
திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தவர் சாரங்க். இவர் கடந்த 6ம் தேதி தாயாருடன் ஆட்டோவில் பயணிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சாரங்க் உயிரிழந்த நிலையில், அவரது உடல் பாகங்களை எடுத்து 12 பேருக்கு பொருத்த பெற்றோர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனிடையே சாரங்க்கின், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் வெளியான நிலையில் அவர் ஏ பிளஸ் கிரேடு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. சாரங்க், இந்த உலகத்தில் இல்லை என்பதால் அவரது பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.