சென்னை மசூதியில் மோதல்.. சோகத்தில் முடிந்த ரம்ஜான் கொண்டாட்டம்
குரோம்பேட்டை அருகே மசூதியில் ஊழியர்களுக்கு பணம் வழங்கியபோது ஏற்பட்ட மோதலில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை அஸ்தினாபுரம் பகுதியிலுள்ள மசூதியில் ரம்ஜான் பண்டிகை நாட்களில் பணிபுரிந்தவர்களுக்கு, மசூதி ரம்ஜான் கமிட்டி சார்பில் பணம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது பணம் பெற்றுக்கொண்ட முகமது ரியாஸ் என்பவர் அங்கு இருந்த காவலாளியிடம், அவருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என கேட்டுள்ளார். அப்போது கமிட்டி செயலாளர் அதிக்குர் ரகுமான், அதை ஏன் நீ கேட்கிறாய் என கேட்கவே, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மயக்கமடைந்த முகமது ரியாஸ் மருத்துவமனைக்கு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story