திருவாரூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் - நோயாளிகளின் உறவினர்கள் இடையே மோதல்

x

திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்நோயாளியை பார்ப்பது தொடர்பாக பயிற்சி மருத்துவர்ளுக்கும், உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதாக கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமியர்கள், நோன்பில் இருக்கும் தங்களை குடித்து இருப்பதாக கூறி பயிற்சி மருத்துவர் திட்டியதாக குற்றம்சாட்டினார். இந்த பிரச்சினை காரணமாக பயிற்சி மருத்துவர்கள்-இஸ்லாமியர்கள் இடையே மோதல் போக்கு உருவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்