முதல்வருக்காக ரேடியோ கட்டுவதில் தள்ளுமுள்ளு.. கற்களால் தாக்கி கொண்ட திமுகவினர்.. படுகாயமடைந்த போலீசார்

x

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசி சென்றுள்ளார்.

இந்நிலையில் கடையநல்லூர் அருகே முதல்வரை வரவேற்க ரேடியா கட்டுவதில், திமுகவினரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மோதல் முற்றி கைகலப்பு வரை சென்றதால், போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒரு தரப்பினர் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், சுந்தரபாண்டியன் என்ற காவலர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் காவலர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்