கற்களை வீசி ராணுவ வீரர்களை ஓடவிட்ட பொதுமக்கள்... அமெரிக்கர் உட்பட 5 பேரை கொன்ற ராணுவம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகானத்தை ஒட்டிய மெக்சிகோ நகரான நூவோ லரெடோவில் ராணுவத்தின் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வாகனத்தில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில், ஒரு அமெரிக்கர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதோடு, படுகாயங்களுடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆயுதம் இல்லாதவர்களையும் தாக்குதல் நடத்துவதா? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பிய போது, அவர்களையும் ராணுவ வீரர்கள் சரமாரியாக தாக்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ராணுவ வீரர்களை கற்களைக் கொண்டு தாக்கினர்.
அப்போது, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களை விரட்டினர்.
இதையடுத்து, கல்வீச்சில் இருந்து தப்பிக்க தங்களது வாகனத்தில் ஏறி அங்கிருந்து வெளியேறினர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மேயர் கார்மென் லிலியா தெரிவித்துள்ளார்.
Next Story