ஆருத்ரா நிறுவன மோசடி ஊழியரை மரத்தில் கட்டி வைத்து நையப்புடைத்த பொதுமக்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில், சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்ததாக தெரிகிறது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 20 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாக கூறி, கோடிக்கணக்கில் முதலீடாக பெறப்பட்டுள்ளது. இதனிடையே, பணமோசடி புகாரில் ஆருத்ரா நிறுவனம் மூடப்பட்ட நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நெமிலி கிளையில் ஊழியர்களாக இருந்த யோகானந்த் , சதீஷ் ஆகியோரின் வீட்டை முதலீட்டாளர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். தொடர்ந்து யோகானந்த் தலைமறைவான நிலையில், சதீஷை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சதீஷை பாதுகாப்பாக மீட்டனர்.
Next Story