விஜய் வாயில் சிகரெட் - அன்புமணி பரபரப்பு டுவிட்
நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். லியோ படத்தின் முதல் அறிவிப்பில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், விஜய் படங்களை குழந்தைகள், மாணவர்கள் பார்ப்பதால், அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து மாணவர்கள் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என சுட்டிக் கட்டியுள்ளார். புகைப்பழக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பு விஜய்க்கு உண்டு எனவும் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போல புகைப்பிடிக்கும் காட்சிகளில் விஜய் நடிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
Next Story