நாட்டை ஆளப்போகும் 'சோழர்' செங்கோல்..! புதிய சகாப்தத்தை எழுதும் தமிழ்நாடு..! - தமிழ் மரபுப்படியே நிறுவும் பிரதமர்

x

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றம் 28 ஆம் தேதி திறக்கப்படுகிறது.நாடாளுமன்றத்தில் மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே 1947-ல் தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற செங்கோல் வைக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற போது நேருவுக்கு பொன்னாடை போர்த்தி, சோழர்கால மாதிரி தங்க செங்கோலை திருவாவடுதுறை ஆதீனம் வழங்கினார்.

வேத மந்திரங்கள் முழங்க கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் செங்கோலுக்கு தெளிக்கப்பட்டு நேருவிடம் வழங்கப்பட்டது. தேவாரத்தில் கோளறு பதிகத்தில் உள்ள 11 பாடல்களை பாடிய ஓதுவார்கள், அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்ற அடியை பாடி முடித்ததும் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

இப்போதும் நாடாளுமன்ற மக்களவையில் இதே தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி பிரதமர் மோடி செங்கோலை மக்களவையில் நிருவுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கோலை நிருவும் விழாவிற்கு தமிழகத்தில் உள்ள 20 ஆதீனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவையில் ஆதீனங்கள் சிறப்பு பூஜையை செய்வார்கள் எனவும் பிரதமர் மோடியை வரவேற்று செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து அவரிடம் வழங்குவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் பிரதமர் மோடி மேள தாளங்கள் முழங்க அதை மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே நிருவுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓதுவார்களால் கோளறு பதிகத்தில் உள்ள 11 பாடல்கள் பாடப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் உதயம் என்ற அடையாளத்தை குறிக்கும் வகையில் இந்த நடைமுறையை மத்திய அரசு பின்பற்ற உள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்