திடீர் ட்விஸ்ட் கொடுத்த சீனா.. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் போனில் பேசிய சீன அதிபர்

x

உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்..இந்த தொலைபேசி உரையாடல் 1 மணி நேரம் வரை நீடித்துள்ளது... இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்கான முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார். எந்த சூழலிலும் அமைதியின் பக்கம் தான் தாங்கள் நிற்போம் என சீனா தெரிவித்துள்ளது. உக்ரைன் படையெடுப்பு விவகாரத்தில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்