"ராஜீவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகம் நிதி" - உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு

x

நாடாளுமன்றத்தில் தவாங்கில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதல் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்திவைக்க நேரிட்டது.

அப்போது நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜீவ் காந்தி அறக்கட்டளைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்ட கேள்விக்கு பதிலளிப்பதை தடுக்க காங்கிரஸ் அமளியை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன தூதரகத்தில் இருந்தும், ஜாகீர் நாயக்கிடம் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

2005-07 கால கட்டங்களில் சீன தூதரகத்திலிருந்து ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பாகவும், 2011-ல் ஜாகீர் நாயக் அமைப்பிடம் இருந்து அனுமதியில்லாமல் 50 லட்சம் ரூபாய் பெற்றது தொடர்பாகவும் காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தினார்.

"Chinese embassy funds Rajiv Foundation" - Home Minister Amit Shah allegesகடந்த அக்டோபர் மாதம் ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்