போர் பயிற்சியில் சீனா.. வீடியோவை வெளியிட்டு பகீர் கிளப்பிய தைவான் - திடீர் பதற்றம்

x

தனது கடற்பகுதியில் சீன ராணுவம் போர் பயிற்சியை தொடங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள தைவான், அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசியதே சீனாவின் இந்த போர் பயிற்சிக்கு காரணம் என கூறப்படுகிறது. நோட்டோ விவகாரத்தில் ரஷ்யாவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, உக்ரைன்-ரஷ்யா போரை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில் தைவான் விவகாரத்தில் தலையீடு செய்தது தற்போது சீனாவுக்கும்-தைவானுக்கும் இடையேயான சர்ச்சையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்