சீனாவை மிரட்டும் BF 7 வேரியண்ட்... உடனே உஷாரான இந்தியா - அமெரிக்காவின் லேட் ரியாக்சன்
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தொற்றுப்பரவல் தீவிரம் அடைந்துள்ளது.
இதனால் உஷாரான இந்தியா, இத்தாலி, ஜப்பான், தைவான், ஆகிய நாடுகள் சீன பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், அந்த வரிசையில் அமெரிக்காவும் இணைந்துள்ளது...
அதன்படி, சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 5ம் தேதி முதல் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சீன விமான பயணிகள் கட்டாய கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் தான் வர வேண்டும் என்றும், 10 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், தொற்று முழுமையாக நீங்கியதற்கான சான்றிழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.