"குழந்தைங்க படிப்பே வேஸ்ட்டா போயிடும்..."..பள்ளிக்கு திடீர் ரெய்டு விட்ட ஆட்சியர் - கேட்ட கேள்வியில் உறைந்து போன அதிகாரிகள்

x

திருவண்ணாமலை ஏந்துவாம்பாடி, முக்குரும்பை, கஸ்தம்பாடி, பால்வார்த்து வென்றான், மற்றும் போளூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்... ஏந்துவம்பாடி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் தொடக்கப்பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்த போது, வகுப்பறையில் கட்டுமான பொருட்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அப்புறப்படுத்த அறிவுறுத்தினார்... மேலும், ஆட்சியரிடம் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வரவில்லை என பெண்கள் முறையிடவே, உடனே விசாரிப்பதாக அவர் உறுதியளித்தார். மேலும் கோரிக்கையின் படி 100 நாள் வேலை திட்ட சிக்கல்களும் சீர் செய்யப்படும் என்று ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்