ஊக்குகள், சாவிகளை விழுங்கிய குழந்தைகள்..! அறுவை சிகிச்சையின்றி அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

x

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விழுங்கிய ஊக்கு உள்ளிட்ட பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் 2 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் விழுங்கிய ஊக்கு, சாவி உள்ளிட்டவைகளை அறுவை சிகிச்சையின்றி அகற்றி அசத்தியுள்ளனர். ஒரு வருடத்தில் மட்டும் அறுவை சிகிச்சையின்றி 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் விழுங்கிய பொருட்களை பாதுகாப்பாக அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் பெற்றோர்கள் கவனமுடன் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்