"பெற்றோரின் அகம்பாவ சண்டையில் குழந்தைகள் அடகு வைக்கப்படுகின்றன" - நீதிமன்றம் வேதனை

x

பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டையில் குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மனைவியின் சட்டவிரோத கட்டுப்பாட்டில் உள்ள தனது இரட்டை குழந்தைகளை மீட்டு தரக்கோரி, அமெரிக்க வாழ் இந்தியரான கிரண்குமார் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் தானும், தனது மனையும் இந்தியராக இருந்தாலும், தங்களுக்கு பிறந்த இரு குழந்தைகள் அமெரிக்க குடிமக்கள் என தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து சென்ற மனைவி, மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பவில்லை என குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, படிப்பை கருத்தில் கொள்வதால் 6 வாரத்திற்குள் குழந்தைகளை அமெரிக்காவில் உள்ள தந்தையிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டது. மேலும் பெற்றோரிடையே ஏற்படும் தேவையற்ற அகம்பாவ சண்டையில் குழந்தைகள் தங்களின் பருவத்தை அனுபவிக்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்