"18 வருஷமாக குழந்தை இல்லை" கடற்கரையில் உயிரை மாய்த்த நபர் - சென்னையில் அதிர்ச்சி
சென்னை, திருவொற்றியூரில் திருமணமாகி 18 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத விரக்தியில் நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தை சேர்ந்தவர் வேலு. இவருக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், குழந்தை இல்லாததால் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் பயனில்லாததால், விரக்தியில் இருந்த வேலு, திருவொற்றியூர் குப்பம் கடற்கரை அருகே விஷமறிந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story