3-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை - சென்னையில் பயங்கரம்

x

சென்னையில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல் - பூஜா தம்பதி, கடந்த ஆறு மாதத்திற்கு முன்,மாதவரம், நேரு தெருவில் மாடி வீட்டில் குடி வந்தனர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஷ்யாம் என்கிற குழந்தையும் உள்ளது. பூஜா துணி துவைப்பதற்காக தனது இரு குழந்தைகளையும் மாடிக்கு அழைத்துக் சென்றார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த இளைய மகன் ஷியாம், மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாத வரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து தாய் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்