திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு!!

x

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை மாநிலம் முழுவதும் சூன் 2023 திங்கள் முதல் அடுத்த ஆண்டு சூன் 2024 திங்கள் வரை, தமிழ்நாடு அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அவர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரின் பரிமாணங்களை போற்றும் வகையில இதழாளர், எழுத்தாளர், கலைஞர்,

சட்டமன்ற நாயகர் உள்ளிட்ட இத்தலைப்புகளில் அமைச்சர்கள் தலைமையில்,12 குழுக்கள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இக்குழுக்கள் கலைஞரின் பன்முகத்தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளார். அதோடு அரசுடன் இணைந்து விழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்