அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் | Cm Stalin

x

மக்களின் மிக முக்கிய தேவையான சாலை பணிகளை நிறைவேற்றுவதில் சிறந்த அளவிற்கு முன்னேற்றம் காட்டிட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், சாலை மற்றும் பால பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் ஊரக வளர்ச்சி, மற்றும் நகராட்சி நிர்வாக துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் பால பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் , சாலைகளின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது நியாயமானதே என தெரிவித்தார். தோண்டப்படும் சாலைகள் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும் எனவும் சென்னை புறநகர் பகுதிகளில் செயல்படுத்தப்படக்கூடிய திட்ட பணிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். மக்களின் மிக முக்கிய தேவையான சாலை பணிகளை நிறைவேற்றுவதில், சிறந்த அளவிற்கு முன்னேற்றம் காட்டிட வேண்டும் எனவும் அப்போது முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்