அரியலூரில் ரூ.78 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
36 ஆயிரத்து 691 பயனாளிகளுக்கு 78 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்குகிறார் முதலமைச்சர்
அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு 32 கோடியே 94 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான 57 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 252 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான 74 முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 691 பயனாளிகளுக்கு 78 கோடி 3 லட்சம் மதிப்புள்ள பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ,தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா,சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்
தொல்.திருமாவளவன் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.