தமிழகம் வந்திறங்கிய அமித்ஷா... பட்டியல் கேட்டு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்
வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் நாடும் நமதே நாற்பதும் நமதே என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வாழ்வில் மறக்க முடியாத மாவட்டம் சேலம் மாவட்டம் தான் என்றார். இந்த ஆண்டு முழுவதும் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது என்றும், ஒவ்வொரு ஊர்களிலும் திமுக கம்பங்களை புதுப்பிக்க வேண்டும், திமுக சார்ந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு படிப்பிற்கு உதவ வேண்டும் கோரிக்கை விடுத்தார். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு அச்சாணியாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது என்றார். வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் நாடும் நமதே நாற்பதும் நமதே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Next Story