"சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டுகிறார்கள்" - சிதம்பரம் கோயிலில் தீட்சிதர் பரபரப்பு

x

சிதம்பர் நடராஜர் கோவில் கனகசபையில், பெண்ணுக்கு தரிசனம் செய்து வைத்ததால் பணி வழங்கப்படவில்லை என தீட்சிதர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பேசிய தீட்சிதர் தர்ஷன், பெண்ணை அவதூறாக பேசிய 20 தீட்சிதர்கள் மீது பதியப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில், தன்னை சாட்சி கூற விடாமல் மிரட்டுவதாக தீட்சிதர்கள் மிரட்டுவதாக குற்றம்சாட்டினார். தங்களுக்கான பணியை ஏலம் விடுவதாகவும், 9 மாதங்களாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தீட்சிதர் தர்ஷன் வேதனை தெரிவித்தார். மேலும் நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தீட்சிதர் தர்ஷன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்