மனைவி, மகன்களுடன் சேர்ந்து அதிமுக நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் - திமுக நிர்வாகியின் பகீர் செயல்
சிதம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியை, திமுக நிர்வாகி சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே கொத்தவாசல் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். அதிமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரான இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த திமுக நிர்வாகியான நாகராஜ் என்பவருக்கும் தேர்தலில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரகாஷை, நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கியதில் படுகாயமடைந்த பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லீசார், நாகராஜின் மகன்கள் மூவரில் இருவரை கைது செய்தனர். லைமறைவாக உள்ள நாகராஜ் மற்றும் அவரின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story