செஸ் ஒலிம்பியாட் - தங்கம் வெல்லுமா இந்திய அணி..?
செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் பிரிவில் ஏ அணி முன்னிலை வகித்து வருகிறது
மகளிர் பிரிவில் பலம் வாய்ந்த அணியாக உள்ள இந்திய ஏ அணி 10 ஆம் சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் அணியுடன் மோதியது.
இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடினர்.
இதனால், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து தங்கம் வெல்லும் வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது.
அதேபோல், ஈரான் அணியுடன் மோதிய, இந்திய ஓபன் ஏ அணியும் வெற்றி பெற்று அசத்தியது.
ஆனால், ஓபன் பி அணியின் ஆட்டம் சமனில் முடிந்தது மட்டுமல்லாமல், தங்கம் வெல்லும் வாய்ப்பிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பலம் வாய்ந்த உஸ்பெகிஸ்தான் அணியுடன் இந்திய ஓபன் பி அணி மோதிய நிலையில் அதிபன், நிஹால் சரின் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதில், தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா வெற்றியை பதிவு செய்த நிலையில், குகேஷ் உலக ராபிட் செஸ் சாம்பியன் நோடிர்பெக் உடன் மோதி தோல்வியை தழுவினார்.