செஸ் ஒலிம்பியாட் விறுவிறுப்பான இறுதி சுற்று போட்டி - மகுடம் சூட போவது யார்?

x

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளான இன்று இந்திய அணிகளுக்கு இரு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11வது சுற்று இன்று நடைபெறுகிறது.

இன்றைய ஆட்டத்தில் ஓபன் பிரிவில் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள இந்திய ஏ அணி, ஐந்தாம் இடத்தில் உள்ள அமெரிக்கா அணியுடன் மோதுகிறது.

புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்திய ஓபன் பி அணி, ஒன்பதாம் இடத்தில் உள்ள ஜெர்மனி அணியுடன் மோத உள்ளது. அதேநேரம் இந்திய ஓபன் பிரிவில் உள்ள சி அணி கஜகஸ்தான் அணியுடன் களமிறங்குகிறது.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய மகளிர் பிரிவின் ஏ அணி ஏழாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்திய மகளிர் பிரிவின் பி அணி ஸ்லோவாக்கியா அணியுடனும், சி அணி கஜகஸ்தான் அணி உடனும் களம் காண்கின்றன.

இன்றைய இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி வெற்றியை பதிவு செய்தால் தங்கப்பதக்கத்தை வெல்லும்,

ஓபன் பிரிவில் இந்திய பி அணி வெற்றியை பதிவு செய்தால் வெண்கல பதக்கம் உறுதியாகும்.

ஒரு வேளை ஓபன் பிரிவில் முதல் இரண்டு இடத்தில் இருக்கக்கூடிய உஸ்பெகிஸ்தான் மற்றும் அர்மேனியா அணிகள், எதிர் அணியிடம் தோல்வியை சந்தித்தால்,

இந்திய ஓபன் பி அணி எதிர்த்து ஆடக்கூடிய ஜெர்மன் அணியை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்