இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா ; யார் யார் பங்கேற்பு?
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, கடந்த மாதம், 28ம் தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கடந்த 29ம் தேதி முதல் செஸ் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டி இன்றுடன் நிறைவடைகிறது.
தொடர்ந்து, இன்று மாலை 6.30 மணிக்கு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடைபெறுகிறது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கலந்து கொள்கிறார்.
விழாவில், 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.