சொன்னது போலவே `O' டர்ன் அடித்து திரும்பும் சுழற்சி - சென்னைக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்

x

"வரும் 24, 25ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு"

[2:34 pm, 22/12/2024] Off Ticker: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வரும் 24, 25ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

[2:36 pm, 22/12/2024] Off Ticker: “சென்னையில் மழைக்கு வாய்ப்பு“

[2:36 pm, 22/12/2024] Off Ticker: சென்னையின் ஒருசில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான

தினசரி வானிலை அறிக்கை

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில், மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி) 8, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), விருதுநகர் (விருதுநகர்) தலா 6, கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), சிறுகமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), பையூர் AWS (கிருஷ்ணகிரி), குளித்தலை (கரூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை) தலா 5, திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி), பாரூர் (கிருஷ்ணகிரி), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பரமத்திவேலூர் (நாமக்கல்), ஆலங்குடி (புதுக்கோட்டை), மிமிசல் (புதுக்கோட்டை), பாடலூர் (பெரம்பலூர்) தலா 4, நாமக்கல் AWS (நாமக்கல்), டேனிஷ்பேட்டை (சேலம்), செட்டிகுளம் (பெரம்பலூர்), மோகனூர் (நாமக்கல்), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), அன்னவாசல் (புதுக்கோட்டை), கடவூர் AWS (கரூர்), மாயனூர் (கரூர்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), ஆயிங்குடி (புதுக்கோட்டை), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 3, கிளானிலை (புதுக்கோட்டை), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), முசிறி (திருச்சிராப்பள்ளி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), விருதுநகர் AWS (விருதுநகர்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), காரையூர் (புதுக்கோட்டை), வாழப்பாடி ARG (சேலம்), விராலிமலை (புதுக்கோட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), கோவிலங்குளம் (விருதுநகர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி) தலா 2, கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), மானாமதுரை (சிவகங்கை), பாலகோடு ARG (தர்மபுரி), பாலக்கோடு (தர்மபுரி), குடிமியான்மலை (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), தர்மபுரி PTO (தர்மபுரி), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), கல்லிக்குடி (மதுரை), தோகமலை (கரூர்), குருவாடி (அரியலூர்), திருமயம் (புதுக்கோட்டை), ஒகேனக்கல் (தர்மபுரி), சிவகாசி (விருதுநகர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), திருமங்கலம் (மதுரை), அரியலூர் PTO (அரியலூர்), தாலுகா அலுவலகம் அரியலூர் (அரியலூர்), வல்லம் (தஞ்சாவூர்), தர்மபுரி (தர்மபுரி), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), தழுதலை (பெரம்பலூர்), திருவாடானை (ராமநாதபுரம்), அரியலூர் AWS (அரியலூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), கல்லந்திரி (மதுரை), துறையூர் (திருச்சிராப்பள்ளி), ஏலகிரி ARG (திருப்பத்தூர்) தலா 1.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):

அதிகபட்ச வெப்பநிலை:- ஈரோடு: 35.2° செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 17.2° செல்சியஸ்

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை 1730 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, இன்று (22-12-2024) காலை 0830 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24 – ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.

22-12-2024 மற்றும் 23-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

24-12-2024: வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம்,…



Next Story

மேலும் செய்திகள்