"2 தோசை சாப்பிட்டு காபி குடிச்சான்.. பாத்ரூம்லயே அவன் உயிர் போச்சு" - ஒரு தாயின் கதறல்

x

பெரம்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், செல்போன் திருட்டு வழக்கில், துரைப்பாக்கம் போலீசாரிடம் சிக்கி உள்ளார். செல்போனை ஒப்படைத்த நிலையில், தினேஷ்குமாரை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், இரவு தூங்கிவிட்டு எழுந்த தினேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பதறிப்போன குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினேஷ்குமாரின் இறப்பில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி திரு வி.க. நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமை அன்று மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்